Bible-Server.org  
 
 
Praise the Lord, all ye nations      
Psalms 117:1       
 
enter keywords   match
 AND find keywords in

Home Page
ஆதியாகமம்
Genesis
யாத்திராகமம்
Exodus
லேவியராகமம்
Leviticus
எண்ணாகமம்
Numbers
உபாகமம்
Deuteronomy
யோசுவா
Joshua
நியாயாதிபதிகள்
Judges
ரூத்
Ruth
1 சாமுவேல்
1 Samuel
2 சாமுவேல்
2 Samuel
1 இராஜாக்கள்
1 Kings
2 இராஜாக்கள்
2 Kings
1 நாளாகமம்
1 Chronicles
2 நாளாகமம்
2 Chronicles
எஸ்றா
Ezra
நெகேமியா
Nehemiah
எஸ்தர்
Esther
யோபு
Job
சங்கீதம்
Psalms
நீதிமொழிகள்
Proverbs
பிரசங்கி
Ecclesiastes
உன்னதப்பாட்டு
Song of Solomon
ஏசாயா
Isaiah
எரேமியா
Jeremiah
புலம்பல்
Lamentations
எசேக்கியேல்
Ezekiel
தானியேல்
Daniel
ஓசியா
Hosea
யோவேல்
Joel
ஆமோஸ்
Amos
ஒபதியா
Obadiah
யோனா
Jonah
மீகா
Micah
நாகூம்
Nahum
ஆபகூக்
Habakkuk
செப்பனியா
Zephaniah
ஆகாய்
Haggai
சகரியா
Zechariah
மல்கியா
Malachi
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
அப்போஸ்தலருடைய நடபடிகள்
Acts
ரோமர்
Romans
1 கொரிந்தியர்
1 Corinthians
2 கொரிந்தியர்
2 Corinthians
கலாத்தியர்
Galatians
எபேசியர்
Ephesians
பிலிப்பியர்
Philippians
கொலோசெயர்
Colossians
1 தெசலோனிக்கேயர்
1 Thessalonians
2 தெசலோனிக்கேயர்
2 Thessalonians
1 தீமோத்தேயு
1 Timothy
2 தீமோத்தேயு
2 Timothy
தீத்து
Titus
பிலேமோன்
Philemon
எபிரெயர்
Hebrews
யாக்கோபு
James
1 பேதுரு
1 Peter
2 பேதுரு
2 Peter
1 யோவான்
1 John
2 யோவான்
2 John
3 யோவான்
3 John
யூதா
Jude
வெளிப்படுத்தின விசேஷம்
Revelation
 
 

 
 
translate into
லேவியராகமம் Chapter1
 
1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
 
2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும்.
 
3 அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்து,
 
4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
 
5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
 
6 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
 
7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
 
8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
 
9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
 
10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
 
11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
 
12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
 
13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
 
14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.
 
15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
 
16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
 
17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
 
 

  | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | [ Next ]