Bible-Server.org  
 
 
Praise the Lord, all ye nations      
Psalms 117:1       
 
enter keywords   match
 AND find keywords in

Home Page
ஆதியாகமம்
Genesis
யாத்திராகமம்
Exodus
லேவியராகமம்
Leviticus
எண்ணாகமம்
Numbers
உபாகமம்
Deuteronomy
யோசுவா
Joshua
நியாயாதிபதிகள்
Judges
ரூத்
Ruth
1 சாமுவேல்
1 Samuel
2 சாமுவேல்
2 Samuel
1 இராஜாக்கள்
1 Kings
2 இராஜாக்கள்
2 Kings
1 நாளாகமம்
1 Chronicles
2 நாளாகமம்
2 Chronicles
எஸ்றா
Ezra
நெகேமியா
Nehemiah
எஸ்தர்
Esther
யோபு
Job
சங்கீதம்
Psalms
நீதிமொழிகள்
Proverbs
பிரசங்கி
Ecclesiastes
உன்னதப்பாட்டு
Song of Solomon
ஏசாயா
Isaiah
எரேமியா
Jeremiah
புலம்பல்
Lamentations
எசேக்கியேல்
Ezekiel
தானியேல்
Daniel
ஓசியா
Hosea
யோவேல்
Joel
ஆமோஸ்
Amos
ஒபதியா
Obadiah
யோனா
Jonah
மீகா
Micah
நாகூம்
Nahum
ஆபகூக்
Habakkuk
செப்பனியா
Zephaniah
ஆகாய்
Haggai
சகரியா
Zechariah
மல்கியா
Malachi
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
அப்போஸ்தலருடைய நடபடிகள்
Acts
ரோமர்
Romans
1 கொரிந்தியர்
1 Corinthians
2 கொரிந்தியர்
2 Corinthians
கலாத்தியர்
Galatians
எபேசியர்
Ephesians
பிலிப்பியர்
Philippians
கொலோசெயர்
Colossians
1 தெசலோனிக்கேயர்
1 Thessalonians
2 தெசலோனிக்கேயர்
2 Thessalonians
1 தீமோத்தேயு
1 Timothy
2 தீமோத்தேயு
2 Timothy
தீத்து
Titus
பிலேமோன்
Philemon
எபிரெயர்
Hebrews
யாக்கோபு
James
1 பேதுரு
1 Peter
2 பேதுரு
2 Peter
1 யோவான்
1 John
2 யோவான்
2 John
3 யோவான்
3 John
யூதா
Jude
வெளிப்படுத்தின விசேஷம்
Revelation
 
 

 
 
translate into
2 தெசலோனிக்கேயர் Chapter1
 
1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
 
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
 
3 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
 
4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
 
5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
 
6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
 
7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
 
8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
 
9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,
 
10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
 
11 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;
 
12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
 
 

  | 2 | 3 | [ Next ]